எல்லோரும் எங்கள் மாநில முதலமைச்சராகி விட முடியுமா..... விடியாமலேயே விடியல் தருவதற்கு?

 
pmk

விடியாமலேயே விடியல் தருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவதாக ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், அவர்கள்  அறியாமல் பிழை செய்து விட்டார்கள்... மன்னியும்!

’’ நாங்கள் அறியாமல் பிழை செய்து விட்டோம், எங்களை மன்னித்து விடும்”  என்பது தான் பிகார் மாநிலத்தின் முதலமைச்சரும், கர்நாடகம், ஒதிஷா மாநிலங்களின் முதலமைச்சர்களும் தினமும் உதிர்த்துக் கொண்டிருக்கும் சொற்களாம்.

PMK

ஆமாம்.... ஒற்றைக் கடிதத்தில் சமூகநீதியை பாதுகாப்பதை விடுத்து,  கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி, லட்சக்கணக்கில் அரசு ஊழியர்களை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான பக்கங்களில் அறிக்கைகளை தயாரித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தியிருக்கிறோமே? என்பது தான் அவர்களின் கவலையாம்.


அதானே... எல்லோரும் எங்கள் மாநில முதலமைச்சராகி விட முடியுமா.....

விடியாமலேயே விடியல் தருவதற்கு? என்று குறிப்பிட்டுள்ளார்.