"கள்ள லாட்டரி மனித வேட்டையை தொடங்கினால் மக்கள் தாங்க மாட்டார்கள்" - ராமதாஸ் வேதனை!!

 
tn

தமிழகத்தில் கள்ள லாட்டரியை  அடியோடு ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

suicide

ஈரோடு எல்லப்பாளையம் முல்லை நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் .  நூல் வியாபாரியான இவர் லாட்டரியில் 62 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக ராதாகிருஷ்ணன்தற்கொலை செய்து கொண்டார்.  தற்கொலைக்கு முன்னதாக செல்போனில் வீடியோ எடுத்த இவர்,  எனது தற்கொலைக்கு கருங்கல்பாளையம் 39வது வார்டு கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர்  செந்தில் தான் காரணம்.  அவரிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக பெற்று தனது குடும்பத்தினரிடம் வழங்க வேண்டும்.  மேலும் லாட்டரி சீட்டு பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது . லாட்டரி சீட்டை ஒழித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ராதாகிருஷ்ணனின் உடலை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  லாட்டரி சீட்டில் பல லட்சம் ரூபாயை இழந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்  பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

pmk
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஈரோடு எல்லப்பாளையத்தைச் சேர்ந்த  இராதாகிருஷ்ணன் என்ற நூல் வணிகர் கள்ள லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்ததால் ஏற்பட்ட விரக்தி காரணமாக  தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்  என்ற செய்தி வேதனையளிக்கிறது. இது குறித்து காணொலி வாக்குமூலமும் வெளியிட்டுள்ளார்! தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் ஆகி விட்டன. அதன்பிறகும் லாட்டரி விற்பனை தொடர்கிறது; ஒருவரே ரூ.62 லட்சத்தை இழந்திருக்கிறார் என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் கள்ள லாட்டரி விற்பனை எந்த அளவுக்கு புரையோடியிருக்கிறது  என்பதை உணர முடியும்! ஏற்கனவே ஒருபுறம் ஆன்லைன் சூதாட்டம் உயிர்களை பலி வாங்கும் நிலையில், கள்ள லாட்டரியும் மனித வேட்டையை தொடங்கினால் மக்கள் தாங்க மாட்டார்கள். அதனால், தமிழகத்தில் கள்ள லாட்டரியை  அடியோடு ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.