“எனக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும்”- ராமதாஸ்

 
ச்

10.5 இட ஒதுக்கீடு, 20% இட ஒதுக்கீடு கொடுத்தற்கு, அதில் பயன்பெற்றவர்கள் என்னிடம் வந்து நன்றி சொல்லியிருக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


விழுப்புரத்தில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய ராமதாஸ், “எனது நண்பர் கருணாநிதி 20 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தார், 115 சமுதாய மக்கள் பயன்பெற்றனர். தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா சமுதாயங்களும் என் பின்னால் வாருங்கள். உங்களுக்கு எல்லாம் கிடைக்கும். 10.5 இட ஒதுக்கீடு, 20% இட ஒதுக்கீடு கொடுத்தற்கு, அதில் பயன்பெற்றவர்கள் என்னிடம் வந்து நன்றி சொல்லியிருக்க வேண்டும். எனக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும் ஆனால் எல்லோரும் சேர்ந்து உச்சநீதிமன்றம் சென்றுவிட்டார்கள். இருந்தாலும் அவர்களுக்கும் சேர்த்தே நாங்கள் போராடுவோம். நான் ஒரு டாக்டர் என்பதால் உங்கள் மனங்களில் உள்ளதை எக்ஸ்ரே எடுத்து பார்த்து விடுவேன்... உங்கள் விருப்பப்படி செயல்படுவேன். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 36 தீர்மானங்கள் பாமகவிற்கு மட்டுமானதல்ல, தமிழக மக்களுக்கானது. தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்காகவும் போராடினேன். சாதிவாரி கணக்கெடுப்பு,10.5% இடஒதுக்கீட்டை நிறைவேற்ற முதல்வரை சந்தித்து பாடம் எடுத்தும் பயன் இல்லை” என்றார்.