யாருடன் கூட்டணி? அன்புமணி பெயரைக்கூட சொல்லாமல் உரையாற்றிய ராமதாஸ்

 
ச் ச்

பாமக தொண்டர்கள் விரும்பும் வகையில் நல்ல தேர்தல் கூட்டணியை அமைப்பேன் என நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய ராமதாஸ், “இயற்கையான கூட்டணி, வெற்றிக்  கூட்டணி.  கூட்டணி அமைக்கும் முழு அதிகாரம் கொடுத்துள்ளீர்கள். உங்கள் மனதில் உள்ளதை நான் அறிவேன். பாமக தொண்டர்கள் விரும்பும் வகையில் நல்ல தேர்தல் கூட்டணியை அமைப்பேன். தொண்டர்கள் கொடுத்த அதிகாரத்தை சரியாக பயன்படுத்துவேன். இதுவல்லவோ கூட்டம்; இதுவல்லவோ பொதுக்குழு என்ற அளவுக்கு கூட்டம் கூடியுள்ளது; வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கூட்டம், காசு கொடுத்து கூட்டப்பட்டதல்ல; கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே தொண்டர்கள்தான். மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை செய்ய வேண்டும் என சொல்லி தமிழக அரசு தட்டிக் கழிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் வரை போராடாமல் விடப்போவதில்லை. முதல்வர் நினைத்தால் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உடனே வழங்க முடியும். இருக்கின்ற தரவுகளை வைத்து ஒரே வாரத்தில் இட ஒதுக்கீடு கொடுக்க முடியும். ” என்றார்.

இன்று நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியின் பெயரைக்கூட சொல்லாமல், ராமதாஸ் தன் உரையை முடித்துள்ளார். முன்னதாக கூட்டத்தில் அன்புமணி மீது, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அதுகுறித்து ராமதாஸ் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.