"கூட்டணி குறித்து முடிவு செய்ய பொதுக்குழு எனக்கு அதிகாரம் வழங்கும்" - ராமதாஸ்

 
ramadoss ramadoss

கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரத்தை பொதுக்குழு எனக்கு வழங்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ramadoss

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ,  சேலத்தில் நாளை நடைபெற உள்ள செயற்குழு மற்றும் பொது குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று 1 மணி அளவில் சேலம் வருகை தந்தார். சேலம் 
சிவராஜின் ஹோட்டலில் தங்க வந்த அவரிடம் செய்தியாளர்கள் பொதுக்குழு குறித்து  கேட்டபோது, பொதுக்குழுவை நாளை பாருங்கள். நாளை கேளுங்கள். நாளைக்கு சொல்ல வேண்டியதை  இன்று சொன்னால் உப்பு சப்பு  இல்லாமல் போகும். கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியிட பொதுக்குழுவில் எனக்கு அறிவிப்பு கொடுக்கும் என்றார்.

இந்த பொதுக்குழு மாற்றத்தை உருவாக்குமா என்ற கேள்விக்கு ... எதிர்பாருங்கள் எனத் தெரிவித்தார். நாளை என் பேச்சை கேட்டு விட்டு மீண்டும் என்னை சந்தியுங்கள் என செய்தியாளர்களை கேட்டுக்கொண்டார்.