“அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கிவிட்டேன்! 99% பாமகவினர் என் பக்கம்”- ராமதாஸ்
“அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கிவிட்டேன்! 99% பாமகவினர் என் பக்கம்”- ராமதாஸ்அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கிவிட்டேன்.. பொய்யர்கள் புரட்டர்கள் எது வேணாலும் சொல்வார்கள்.. அதை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு குறித்த அன்புமணி ராமதாஸ் தரப்பின் கருத்துக்கு பதிலடி கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ், “அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கிவிட்டேன். அவர் இப்போ கட்சி உறுப்பினரே கிடையாது, அப்படி இருக்கையில் 29 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு செல்லாது என அறிவிக்க அன்புமணிக்கு உரிமை இல்லை. எதோ வழிப்போக்கன் சொல்வதுபோல் சொல்லிட்டு போகவேண்டியதுதான். அதை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. 100-க்கு 99% பாட்டாளி மக்கள் கட்சியினர் என் பக்கம் இருக்கிறார்கள். ஆகையால் அன்புமணியின் பொய்யும் புரட்டும் எடுபடாது. அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி, வழிப்போக்கன் சொல்வது போல் பேசி வருகிறார்.” என்றார்.
இதேபோல் பாமக கெளரவ தலைவர் ஜி.மணி. செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாமக தலைவர் அன்புமணி இல்லை. ராமதாஸ்தான் என நீதிமன்றம் தெளிவாக சொல்லிவிட்டது. டிச.29இல் நடக்கும் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் கூட்டணி குறித்து ராமதாஸ் அறிவிப்பார்” என்றார்.


