“ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது அண்புமணியின் தனிப்பட்ட கருத்து”- ராமதாஸ்
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது அவருடைய கருத்து என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 37 வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு தைலாபுரத்திலுள்ள காரல் மார்க்ஸ், அம்பேத்கர் பெரியார், சிலைகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மாலை அணிவித்து கட்சி கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் கட்சியின் அரசியல் ஆலோசனை குழு தலைவர் பேரசிரியர் தீரன், ராமதாசின் பேரன் முகுந்தன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், “பாமக கட்சி தொண்டர்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற கடுமையாக போராடி கொண்டிருக்கின்றனர். மேலும் போராட வேண்டி இருக்கிறது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என அன்புமணி ராமதாஸ் கூறியது, அது அவருடைய கருத்து” எனக் கூறினார்.


