பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்! செயல் தலைவராக நியமனம்- ராமதாஸ்

ராமதாஸ் எனும் நான் பாமக நிறுவனர் என்ற அடிப்படையில் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “ராமதாஸ் எனும் நான் பாமக நிறுவனர் என்ற அடிப்படையில் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன். அன்புமணியை பாமகவின் செயல் தலைவராக நியமிக்கிறேன். எனது முழு மனதுடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.பாமக தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணியை நீக்க பல காரணங்கள் உள்ளன. அதனை சிறுக சிறுக நானே தெரிவிப்பேன். தலைவராக இன்றுதான் பொறுப்பு ஏற்றுள்ளேன். 2026 தேர்தலில் கூட்டணி குறித்து மூத்த நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும். பாஜகவுடன் கூட்டணியில் தொடர்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். 2026 தேர்தலை முன்னிட்டும், இளைஞர்களை வழிநடத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.