“ராஜ்யசபா சீட் தொடர்பாக தி.மு.கவிடம் பா.ம.க. எதுவும் கேட்காது”- ராமதாஸ்

புதுச்சேரியில் மகளிர் உரிமை தொகை ரூ 2500 உயர்த்தி இருப்பது வரவேற்கதக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “2021 ம் ஆண்டு முதல் தமிழக அரசு நிதிநிலை அறிக்கைகள் வெளியிட்டது. திமுக அரசு நாளை மறுநாள் 15ம் தேதி வெளியிடப்படும் கடைசி நிதி நிலை அறிக்கைகள் வெளியிடப்பட உள்ளது. எராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தடுப்பணைகள் கட்டப்படவில்லை. புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை. அரசு கல்லூரிகால் 4000 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றது, அது குறித்து எதுவும் நடக்கவில்லை. இந்த அரசு அறிவிப்புகளை வெளியிடும் அரசாகவே உள்ளது. இதில் செயல்படுத்தப்பட்டவைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சத்தீஸ்கரில் ரூ.3, 120, ஒரிசாவில் ரூ.3, 100 நெல் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலையை ரூ.3,500 ஆக உயர்த்தவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தும் தமிழக அரசு உயர்த்தவில்லை. சுவாமிநாதன் கமிஷன் கூறியது போல குவிண்டால் ஒன்றுக்கு ரூ 3450 கொள்முதல் விலை வழங்கவேண்டும். இதை கருத்தில் கொண்டு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1000 உயர்த்தி ரூ. 3320 வழங்கவேண்டும். சென்னையில் 22ம் தேதி தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்திற்கு 7 மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். கர்நாடக துணை முதல்வரை தமிழக அரசு சார்பில் நேரில் சென்று அழைத்துள்ளனர். கர்நாடக அரசின் நிதி நிலை அறிக்கையில் மேகதாது அணை கட்ட ஆயத்தமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தமிழகத்திற்கு அழைக்கக்கூடாது என்று 8ம் தேதி அறிக்கை வெளியிட்டேன். ஆனால் கர்நாடகாவை அழைத்து காவிரி பாசன விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் துரோகம் செய்துள்ளார்.
புதுச்சேரியில் மகளிர் உரிமை தொகை ரூ. 2500 உயர்த்தி இருப்பது வரவேற்கதக்கது. தமிழகத்தில் 2.25 கோடி குடும்பங்கள் உள்ள நிலையில் தற்போது 1. 16 கோடி குடும்பங்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்குவது ஏற்கதக்கதல்ல. தமிழகத்தில் இத்தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தவேண்டும். தமிழகத்தில் ஒரு மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகள்கூட அமைக்கப்படவில்லை. 1990 வரை அமைக்கப்பட்ட காற்றாலைகள் சேதமடைந்துவிட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தியில் 2ம் இடத்திற்கும், சூரிய ஒளி மின் உற்பத்தியில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. காற்றாலைகள் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு விரைவுபடுத்தவேண்டும். நியாயவிலைக்கடைகள் மூலம் சோதனை அடிப்படையில் தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக குடும்ப அட்டைக்கு 2 கிலோ ராகி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு தேவையான அளவு கொள்முதல் செய்யாததால் இத்திட்டம் தோல்வி அடைந்துவிட்டது
தமிழர்கள் நாகரீகமானவர்கள் என்பது குறித்த புத்தகங்களை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதாவுக்கு கொடுக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்களுக்கு பாராட்டுக்கள். அன்புமணிக்கு ராஜ்யசபை பதவி வேண்டுமென திமுகவிடம் கேட்கமாட்டோம். வேறு யாரிடம் வைக்கலாம் என நீங்களே சொல்லுங்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.