“கூட்டணியில் மாற்றமா? பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்யப்படும்”- ராமதாஸ்

 
ramadoss

2026 தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது, கூட்டணி குறித்து பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்யப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட ஒதுக்கப்பட்ட சாதி அர்ச்சகர்களுக்கு அவமதிப்பு -  கொதித்தெழுந்த ராமதாஸ் - தமிழ்நாடு


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “கடந்த ஆண்டு கரும்பு அறவை பருவம் முடிவுக்கு வந்துவிட்டது. அரசு மற்றும் தணியார் சர்க்கரை ஆலைகளால் கொள்முதல் செய்யப்படும் கரும்பின் கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவித்துள்ளது. 3151 ரூபாய் கொள்முதல் விலை வழங்கப்படும் என அறிவித்துள்ளது இது மத்திய அரசு அறிவித்த விலை. இது போதாது. திமுக தேர்தல் அறிக்கையில் கரும்பு டன்னுக்கு நான்கு ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் திமுக செயல்படுத்தவில்லை. கரும்பு டன்னுக்கு கொள்முதல் விலையை ஐந்தாயிரமாக வழங்க வேண்டும். 

விவசாய மின் பயன்பாட்டை கணக்கிட சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மைக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை படிப்படியாக் நிறுத்த வழி வகுக்கும் என கூறப்படுகிறது. இதற்கு விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வேளாண் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடாது. மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு அதனை இலவச மின்சாரத்தை பறிக்க முயலக்கூடாது. மும்மொழி கொள்கையில் உறுதியாக உள்ள மத்திய அரசு இந்த விவகாரத்தில் அஞ்சுவது ஏன்? தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தமாட்டோம் என உறுதியாக கூற வேண்டும். விவசாயிகள் போராட்டம் நடத்தும் சூழல் ஏற்படுவதை தடுக்க வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்துவிட்டது. கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பல இடங்களில் மின் வெட்டு செய்யப்படுகிறது. பகல் நேரத்தில் அரைமணி நேரம் மின் வெட்டு தொடர்வதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மின் வெட்டால் மாணவ, மாணவிகள், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

Tamil Nadu election: PMK chief Ramadoss invites parties, except BJP, DMK  and AIADMK, for alliance

தமிழ்நாட்டில் இப்போது மாலை நேரத்தில் மூன்றாயிரம் மெகாவாட் மின் பற்றாக்குறை நிலவுவதாகவும், மார்ச் மாதத்தில் 4,297 மெகா வாட்டாக அதிகரிக்கும் என மத்திய மின் வாரியம் கூறியுள்ளது. இனி வரும் காலங்களில் மின் தடை ஏற்படாமல் தடுக்க தமிழ்நாடு மின் வாரியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள ஒரு சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும். தொகுதி மறு வரையறை தொடர்பாக திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் எங்கள் கட்சியின் தலைவர் கலந்துகொண்டு கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். எங்களைப் பொறுத்தவரையில் முன்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை, இரு மொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை, ஒரு மொழிக் கொள்கையை உன்னத கொள்கை. 2026 தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது, பொதுக்குழுவை கூட்டி பாமக கூட்டணி குறித்து முடிவு செய்யும்” என்றார்.