நமக்கு சமூக நீதியே வேண்டும்; சனாதனம் அல்ல - ராமதாஸ்

 
என்.எல்.சிக்காக மீண்டும் மீண்டும் விளைநிலங்களைப் பறிப்பதா?.. மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும்! - ராமதாஸ் கண்டனம்..

இந்தியாவின் பெயர் மாற்றும் திட்டம் தேவையற்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் குழப்பம்: சரியான விடைகளின் அடிப்படையில்  மறுமதிப்பீடு செய்து முடிவை வெளியிடுக: ராமதாஸ் | pmk founder ramadoss  statement ...

கும்பகோணத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 85 திருமணங்களை நடத்தி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை பயிர் பாதிக்கப்பட்டுள்ளது . நமக்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகா தர மறுக்கிறது. தமிழக அரசு தண்ணீர் கிடைக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது, சமீப நாட்களாக சனாதனம் என்ற பெயர்  அடிபடுகிறது. நமக்கு சமூக நீதிதான் தேவை. அனைவரும் ஒரு தாய் மக்கள். நமக்கு சமூக நீதியே வேண்டும், சனாதனம் அல்ல

இந்தியாவிற்கு பாரத் என்ற பெயர் மாற்றப்படும் சூழல் உள்ளது, இந்தியா என்ற பெயரே நன்றாக உள்ளது, அதே இருக்க வேண்டும். ஒரே நாடு -ஒரே தேர்தல் என்ற திட்டத்தை  வரவேற்கிறேன். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக நிலைப்பாடு என்ன என்பது குறித்து கட்சியின் செயற்குழு ,பொதுக்குழு கூடி முடிவு செய்யும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக உள்ளது” என்றார்.