"சமூகநீதிக் களத்தில் மேலும் பல்லாண்டுகள்..."- ராமதாஸுக்கு தலைவர்கள் வாழ்த்து!!

 
tn

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 84ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். 

PMK

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் ராமதாஸ்  ஐயா அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! சமூகநீதிக் களத்தில் மேலும் பல்லாண்டுகள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற விழைகிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.அதேபோல் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், மருத்துவர் அய்யா.திரு.ராமதாஸ் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பெரியவர் மருத்துவர் அய்யா.ராமதாஸ் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று வாழ்த்தியுள்ளார். 


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் உரிமைக்கு, அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு அயராது உழைத்து வருபவர், சமரசமின்றி சமூகநீதி கொள்கையில் உறுதியாக நிற்கின்ற தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் போராளி!  எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ‘தமிழ்க்குடிதாங்கி’ எங்கள் ஐயா மருத்துவர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! ஐயா அவர்கள் நிறைந்த உடல் நலத்துடனும், உள்ள வலிமையுடனும், தமிழுக்கும், தமிழர்க்கும் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து தொண்டாற்றி, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திட எனது நெஞ்சம் நிறைந்த அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழும்,உங்கள் அன்புப்பிள்ளை, சீமான்" என்று பதிவிட்டுள்ளார்.