"வேண்டும்... வேண்டும்... மீண்டும் பாமக தலைவராக அன்புமணி வேண்டும்" - பாமக தொண்டர்கள் போராட்டம்

 
ச்

பாமக தலைவர் பதவியிலிருந்து நீக்கி செயல்தலைவராக அன்புமணி ராமதாஸ் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி ராமதாசின் ஆதரவாளர்கள் போராட்டம் செய்தபோது கட்சி நிர்வாகிகளுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை நீக்கி விடு செயல்தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்படுவார் பாமகவின் தலைவராக இன்று முதல் தான் இருப்பேன் என அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பான கட்சியின் வளர்ச்சிக்காகவும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி அறிவிப்பதாகவும், மாற்றத்துற்கு நிறைய காரணங்கள் உள்ளன அதை இப்போது ஊடகங்கள் முன்பாக அறிவிக்க முடியாது சிறுக சிறுக தெரிவிப்பேன் என கூறினார். 

இதனையடுத்து பாமக தொண்டர்கள் திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் வீதியிலுள்ள பாமக ராமதாஸ் இல்லம் முன்பாக திரண்டவர்கள் முன்னாள் பாமக நகர செயலாளர் ராஜேஷ் தலைமையில் மீண்டும் அன்புமணி ராமதாசை தலைவராக அறிவிக்ககோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கு வந்த பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. அதற்கேற்றவாறு செயல்படுங்கள் செயல்படுங்கள் தேவையில்லாமல் போராட்டம் செய்யவேண்டாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் போராட்டம் செய்ய கூடாதென கூறிய போது அன்புமணி ராமதாஸ் ஆதரவாளருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திண்டிவனம் போலீசார் கோஷங்களை எழுப்பியவர்களை கலைத்தனர். இதனால் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டது. போராட்டம் செய்தவர்கள் ராமதாஸ் தலைமையை ஏற்க மாட்டோம் அன்புமணி ராமதாஸ் தான் தலைவராக இருக்க வேண்டுமென வலியுறுத்தினர்.