“பாமக மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணி புகைப்படம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை”
மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டு கேட்பு கருவி யார் வைத்தது என்று உரிய விசாரணை செய்ய வேண்டும் என்று அன்புமனி ஆதரவு எம்எல்ஏ சிவக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், “மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டு கேட்பு கருவி யார் வைத்தது பத்து நாட்களுக்கு ஒருமுறை சார்ஜ் போடனும் அதனை யார் செய்தது என்று உரிய விசாரணை செய்ய வேண்டும். பாமக மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணி ராமதாஸ் பெயர் புகைப்படம் இடம் பெறாததை பிரிண்டிங் மிஸ்டெக் என சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் எப்படி கூறுவார்? அவரே தெரியாமல் பேசுகிறார்.
அன்புமணி ராமதாஸ் புகைப்படம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, மருத்துவர் ராமதாஸ் அய்யா படம் இருந்தாலே போதுமானது. அன்புமணி புகைப்படம் போட்டாலும் போடாவிட்டாலும் அன்புமணி இந்தியா முழுவதும் தெரிந்தவர். மத்திய அமைச்சராக இருந்தவர். மாநாட்டிற்குள் இருவரும் இணையலாம், விரைவில் இருவருக்குமான கருத்துவேறுபாடு சுமுகமாக தீர்க்கப்படும். பாமகவில் எந்த கட்சியாலும் பிரச்சனை இல்லை, குடும்ப பிரச்சனை” என்றார்.


