"ராமதாஸை நம்பி செலவு செய்தவர்களை இப்போது நட்டாற்றில் விட்டு விட்டனர்"- அருள்
ராமதாஸ் - அன்புமணி இடையே இணக்கம் ஏற்பட்டுள்ள சூழலில், பாமகவின் ராமதாஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் சேலத்தில் ஆலோசனை நடத்தினர்.

பாமகவில் இரு அணிகளாக செயல்பட்டு வந்த சூழலில், கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்ததைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து பாமக முன்னாள் எம்.எல்.ஏ. அருள் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அன்புமணி ராமதாஸை முன்பு கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், மீண்டும் கட்சியில் தொடர்வதா அல்லது அடுத்தக்கட்ட முடிவு என்ன குறித்து இந்த ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. அருள், “இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு இணைந்திருந்தால், பாமகவினர் கடனாளியாக மாறி இருக்க மாட்டார்கள். ராமதாஸை நம்பி செலவு செய்தவர்களை, இப்போது நட்டாற்றில் விட்டு விட்டனர். ஓராண்டுக்கு முன்னாடி இது நடந்துருந்தா, Deputy CM கிடைச்சிருக்கும்.. இப்போ கடன்காரங்களா நிக்கிறோம். பல கோடி ரூபாயை செலவு செய்தவர்களை நட்டாற்றில் விட்டுள்ளார் மருத்துவர் ராமதாஸ். எங்களின் முடிவை 2 நாளில் அறிவிப்போம்.” என்றார்.

