புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கான தடையை நீக்க வேண்டும் - பிரதமருக்கு அன்புமணி கடிதம்

 
anbumani ramadoss

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை  தொடங்கவும், மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தேசிய மருத்துவ ஆணையம் விதித்திருக்கும் தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். 


இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புதிய மருத்துவக் கல்லூரிகள், கூடுதல் இடங்களுக்கு தடையை நீக்க வேண்டும்! தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தேசிய மருத்துவ ஆணையம் விதித்திருக்கும் தடையை நீக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பா.ம.க. தலைவரும், மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இது தொடர்பாக அவர் கடிதம் எழுதியுள்ளார்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.