“அன்புமணிக்கு தான் அதிகாரம்; சேலத்தில் நடந்தது ஒரு கேலிக்கூத்து”- கே.பாலு
பாமக பொதுக்குழுவை கூட்ட அன்புமணிக்கு தான் அதிகாரம் இருக்கிறது. இன்று நடந்தது பொதுக்குழு அல்ல, கேலிக்கூத்து என அன்புமணி ஆதரவாளர் கே.பாலு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ஆதரவாளர் கே.பாலு, “பாமக பொதுக்குழுவை கூட்ட அன்புமணிக்கு தான் அதிகாரம் இருக்கிறது. இன்று நடந்தது பொதுக்குழு அல்ல, கேலிக்கூத்து. முதன்முறையாக இந்தியாவில் செயற்குழுவும், பொதுக்குழுவும் ஒரே நேரத்தில் நடந்தது ஒரே டைலர், ஒரே சட்டை என்பது போல உள்ளது. கட்சியின் ட்
ராமதாஸ் தலைமையில் நடத்த பொதுக்குழுவின் முதல் தீர்மானத்திலேயே முரண்பாடுகள் உள்ளன. எழுதி கொடுத்ததை ஸ்ரீகாந்தி பேசுகிறார். இந்த கேலிக்கூத்துக்கு காரணம் ஜி.கே.மணி. தமிழக அரசை விமர்சிக்காமலும், மக்கள் பிரச்சனையை பேசாமலும் பொதுக்குழு நடந்துள்ளது. ராமதாஸ் தரப்பு வெளியிடும் போலி அறிவிப்புகளை யாரும் பொருட்படுத்த வேண்டாம். பாமக கூட்டணி, திமுகவை வீழ்த்தும் கூட்டணியாக அமையும். தைலாபுரம் தோட்டம் திமுகவின் Branch ஆபிஸ். ஜி.கே.மணியை இயக்குவது திமுக. பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணியை பாமக பொதுக்குழுவில் எப்படி நீக்க முடியும்? பசுமை தாயகம், அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. அந்த அமைப்பு நிர்வாகிகள் கூடி தான் தலைவரை மாற்ற முடியும், ஆனால் இவர்களாக பொதுக்குழுவில் நீக்கியுள்ளார்கள். கட்சியின் தலைவர், நிறுவனர் பேசாத ஒரே பொதுக்குழு இதுதான். பா.ம.க. பிளவுக்குக் காரணம் ஜி.கே. மணிதான்; தி.மு.க.வின் வேலையைச் செய்து வெகுமதி பெறுகிறார்” என்றார்.


