விக்கிரவாண்டியில் களமிறங்கும் பாமக

 
மோடி ராமதாஸ்

பாஜக கூட்டணியில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

rr

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21-ம் தேதி முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீது ஜூன் 24-ம் தேதி பரிசீலனை, மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26-ம் தேதி கடைசிநாள் என்றும்  தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

இந்நிலையில் பாஜக கூட்டணியில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக களமிறங்க உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்க பாமக நிர்வாக குழு கூட்டம், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நாளை மறுநாள் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற உள்ளது.