“நான் ராமதாசுடன் இருக்கக் கூடாது, அவருடன் இருக்க வேண்டும் என்று அன்புமணி நினைக்கிறார்”- ஜி.கே.மணி

 
 நான் ராமதாசுடன் இருக்கக் கூடாது , அவருடன் இருக்க வேண்டும் என்று அன்புமணி  நினைக்கிறார்.  நான் ராமதாசுடன் இருக்கக் கூடாது , அவருடன் இருக்க வேண்டும் என்று அன்புமணி  நினைக்கிறார்.

கூட்டணி குறித்து வரும் 29ஆம் தேதி  சேலத்தில் நடைபெறும் பொதுக்குழுவில் ராமதாஸ் அறிவிப்பார் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி அளித்துள்ளார்.

சேலம் சூரமங்கலத்தில் உள்ள மேற்கு சட்மன்ற  தொகுதி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, “பாமக செயற்குழு மற்றும்  பொதுக்குழு கூட்டம் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில்  வரும் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், எந்த கட்சியுடன் கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பார். ராமதாஸ் தலைமையில் தான் பாமக  இயங்குகிறது. கட்சி நிறுவனர் ஒப்புதல் இல்லாமல் கூட்டம் நடத்தக் கூடாது என கட்சி விதி உள்ளது. ஆனால் பாமக-வை நான் இயக்குவதாக  கூறும் குற்றச்சாட்டு தவறானது  அன்புமணி மீது முறைகேடு புகார் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை.  அப்படி எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை.  கட்சியில் தலைவர் பதவிக்கு, தேர்தல் ஆணையத்துக்கு தவறான கடிதம் கொடுத்தது குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று தான் கூறினோம்.


தந்தையும், மகனும் ஒன்று சேர்ந்தால் நான் கட்சியை விட்டு விலகுகிறேன். நானோ, எனது குடும்பத்தினரோ கட்சியில் இருக்க மாட்டோம்.வேறு கட்சிக்கும் செல்ல மாட்டோம். தேர்தலில் போட்டியிட அன்புமணி விருப்பமனு வாங்குவது தவறு. அதை அன்புமணி தரப்பு வாங்கக் கூடாது. அதன் மீது நீதிமன்றத்தை நாடுவது குறித்து ராமதாஸ் முடிவு செய்வார். பாமகவின் அடையாளம் ராமதாஸ் தான். அவர் சொல்வோருக்கு தான் மக்கள் வாக்காளிப்பார்கள். வரும் செயற்குழு பொதுக்குழுவில் கூட்டணி குறித்து அறிவிப்போம். நாங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறோமோ அவர்கள் தான் முதலமைச்சர் ஆவார்கள். அன்புமணிக்கு என் மீது கோபமோ, வருத்தமோ இல்லை. நான் ராமதாசுடன் இருக்கக் கூடாது , அவருடன் இருக்க வேண்டும் என்று அன்புமணி  நினைக்கிறார். பாமகவிற்கு மாம்பழ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டது. முகவரி தான் மாறி சென்றுள்ளது. முகவரியை மாற்றி கடிதம் அனுப்புமாறு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுத்துள்ளோம். அங்கிருந்து கடிதம் வந்தால் சின்னம் எங்களுக்கு கிடைக்கும். சேலத்தில் நடைபெறும் பாமக பொதுக்குழு செயற்குழுவுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்” என்றார்.