அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே சிறு சிறு சலசலப்பு! ஒற்றுமைப்படுத்த தீவிர முயற்சி- ஜி.கே.மணி

 
அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே சிறு சிறு சலசலப்பு-ஜி.கே.மணி

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ் அறிவிப்பு குறித்து ஆலோசனை நடத்தினேன். தேர்தல் நெருங்கி வருவதால் இருவரும் இணைந்து செயல்பட்டு கட்சிக்கு வெற்றி தேடித் தரவேண்டும் என்பதே எனது விருப்பம். ராமதாஸ்க்கு நல்ல அறிவுரையை கூறிவிட்டு வந்துள்ளேன். மிக விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே சிறு சிறு சலசலப்புதான் ஏற்பட்டுள்ளது. பாமகவுக்கு தமிழ்நாட்டில் தனித்தன்மை இருந்து வந்தது. ராமதாஸ், அன்புமணியை ஒற்றுமைப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபடுவேன். ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.