வரும் 9ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம்- அன்புமணி அறிவிப்பு
Aug 1, 2025, 22:05 IST1754066131599
பாமக பொதுக்குழு கூட்டம் வரும் 9ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 09.08.2025 (சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃளுயன்ஸ் (Confluence) அரங்கில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


