“ராமதாசை சந்திக்க அனுமதிக்கவில்லை! கதவை சாத்திக்கொண்டார்கள்”- அருள் பரபரப்பு பேட்டி

 
ட்

சேலத்தில் நாளை (16.07.2026) காலை ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் பாமக முன்னாள் எம்எல்ஏ அருள். ராமதாஸ், அன்புமணி மீண்டும் இணைந்த நிலையில், நாளைய ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் பேட்டியளித்துள்ளார்.

நேற்றும் இன்றும் நாளையும் என ராமதாஸ் எங்களுக்கு எப்பொழும் கடவுள்தான். என்னவென்று வழி சொல்லாமல் கதவை சாத்திக்கொண்டார். அவரால் சாத்திக் கொண்டாரா? சாத்தப்பட்டதா? என்பது தெரியவில்லை. தமிழகத்தில் பாமக நிர்வாகிகள் ராமதாஸை விட்டு பிரிந்தபோது அவரோடு இருந்தது நாங்கள் செய்த பாவமா? ராமதாஸ் அவர்களை சந்திக்க அனுமதிக்கவில்லை. யாருக்குமே பார்க்க அனுமதியில்லை.

ராமதாஸூம், அன்புமணியும் மீண்டும் இணைந்துள்ள நிலையில், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாளை சேலத்தில் நடைபெறும் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். கூட்டத்தில் நிர்வாகிகளின் எழுத்துப்பூர்வ கருத்துகள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். இருவரும் பிரிய கூடாதுன்னு தைலாபுரம் தோட்டத்து வாசலில் கத்தி கெஞ்சி கதறி அழுதோம். தேர்தலுக்கு முன்பு பிரிந்துவிட்டு.. இப்போது இணைந்துவிட்டனர். அன்புமணி விட்டுவிட்டு போன பிறகு ராமதாஸ் உடன் நாங்கள் நின்றோம். ஆனால் இப்போது தந்தை - மகன் இணைந்துள்ளனர். பனையூர் அலுவலகத்தில் இருந்து எங்கள் எல்லோருக்கும் அழைப்பு வந்தது. ஆனால் சில அழைப்புகளை நான் எடுப்பதில்லை” என்றார்.