நாளை பாமக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம்!

பாஜகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், நாளை பாமக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியில் இணையும் பாமக-வுக்கு 10 இடங்கள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ராமதாஸை சந்தித்து அன்புமணி நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் இடம் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் பாஜக கூட்டணியில் பாமக-வுக்கு 8 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாமக உடனான பேச்சுவார்த்தையை முடித்த பிறகு தேமுதிகவை அணுக இருப்பதாகவும் பாஜக தரப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை பாமக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. தைலாபுரத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக - பாமக இடையே தொகுதிப் பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக உடனும் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி உடன்பாடு எட்டப்படவுள்ளது.