12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பாமக மாநாடு- 10 லட்சம் பேர் பங்கேற்பார் என தகவல்
மாமல்லபுரம் அருகே நடைபெறும் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பா.ம.க மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்ப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில் மே 11 ஆம் தேதி நாளை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர் சங்கம் நடத்தும் வன்னியர் இளைஞர் திருவிழா சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற உள்ளது. திருவிடந்தையில் உள்ள நித்திய கல்யாணி திருகோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் மாநாடு நடைபெற உள்ளது. 12-வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ள இந்த மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் கலந்துக்கொள்வார்கள் என்பதால் 7 ஆயிரத்திற்க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த மாநாட்டு நடைபெறும் இடத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, “நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு வரலாறு படைக்கும் அளவில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் சாதனை படைக்கும் மாநாடாக அமைக்கும். இந்த மாநாடுக்கு பிறகு எங்கள் இயக்கத்தின் வளர்ச்சி 2026 ஆம் ஆண்டின் தேர்தல் இது அடைப்படையாக முன்னோட்டமாக அமையும், இந்த மாநாட்டிற்க்கு காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். மாநாட்டிற்கு வரும் வழியில் 7 இடங்களில் மத்திய உணவு, குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஆறு மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 150 ஏக்கர் பரபரப்பில் வாகனங்களை நிறுத்த இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.


