“இருவரும் இணைய வாய்ப்பில்லை... எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாசால் வெல்லவே முடியாது”

 
ச் ச்

அன்புமணி ராமதாஸ்தான் பாமகவின் தலைவர் என அளித்த கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் திரும்ப பெறவே இல்லை என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

அன்புமணியை தலைவராக டெல்லி நீதிமன்றம் ஏற்கவில்லை என ராமதாஸ் தரப்பு கூறியிருந்த நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாலு, “அன்புமணி ராமதாஸ்தான் பாமகவின் தலைவர் என அளித்த கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் திரும்ப பெறவே இல்லை. எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பால் வெல்ல முடியாது. 2026 ஆம் ஆண்டு வரை அன்புமணிக்கு தலைவர் பதவிக்காலம் இருப்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரிக்கவில்லை. டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து கொண்டு எங்களுக்கு சாதகம் என கூற கூடாது. அன்புமணியை தலைவராக டெல்லி நீதிமன்றம் ஏற்கவில்லை எனக் கூறிகொண்டு ராமதாஸ் தரப்பினர் கொண்டாடுவதை பார்க்க வினோதமாகவும் கோமாளித்தனமாக உள்ளது.

மாம்பழம் சின்னம் யாருக்கும் இல்லை என்பதை வெற்றி என ராமதாஸ் தரப்பு கொண்டாடுகிறது. இருவரும் மீண்டும் இணையும் சூழல் இல்லை. ஒரு மிகப்பெரிய தவறை அவர்கள் செய்து விட்டார்கள். எந்த தவறு செய்தாலும் அதை சரியாக செய்ய வேண்டும்” என்றார்.