“என்னை சீண்டினால் எல்லாவற்றையும் வெளியே சொல்வேன்”- அன்புமணியை மிரட்டும் அருள்

 
ச்

கத்தியுடன் வந்த 3 பேர் ‘அன்புமணிதான் உன்னைக் கொல்ல சொன்னார்’ என வந்தனர் என ராமதாஸ் ஆதரவு பாமக எம்.எல்.ஏ அருள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சேலம் வாழப்பாடி அருகே தனது காரை தடுத்து நிறுத்தி பா.ம.க.வினர் கற்களாலும் கட்டைகளாலும் சரமாரியாக தாக்கியதாக எம்.எல்.ஏ அருள் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக எம்.எல்.ஏ. அருள், “என்னைக் கொலை செய்ய அன்புமணி தான் ஆட்களை அனுப்பி உள்ளார். அவரால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் உட்பட 15 பேர் ஆயுதங்களுடன் திடீரென தாக்கினார். கத்தியுடன் வந்த 3 பேர் ‘அன்புமணிதான் உன்னைக் கொல்ல சொன்னார்’ என வந்தனர். என்றைக்கோ போகும் உயிர் ராமதாஸ் மகன் கையால் போகட்டும் என காரை விட்டு இறங்கப் பார்த்தேன். ஆனால் உடன் இருந்தவர்கள் தடுத்து விட்டார்கள். என் மீதான தாக்குதல் சம்பவத்தில் அன்புமணியை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். அன்புமணியை பற்றி பல உண்மைகள் எனக்கு தெரியும்.நான் அவரோடு பயணித்தவன்” எனக் கூறினார்.