“2026 தேர்தல் கூட்டணியை ராமதாஸ் தான் முடிவு செய்வார்”- அருள்

 
அருள் அருள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026-ல் தேர்தல் கூட்டணியை ராமதாஸ் தான் முடிவு செய்வார் என பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.

பாமக தலைமை செய்தித் தொடர்பாளராக எம்.எல்.ஏ. அருள் நியமனம்!

மேட்டூர் தனியார் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சேலம் வருகையையொட்டி, மேட்டூர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் எம்எல்ஏ அருள் தலைமையில் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருள், “பாமகவில் நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து பல முறை சமரசம் செய்ய முயற்சி செய்யப்பட்டது. ராமதாசை சந்தித்து மன்னிப்பு கேட்டு இருந்தால் எல்லாம் முடிந்து வந்து இருக்கும், தற்போது வரை பிரச்சனை நீடிப்பது மன வேதனையை அளிக்கிறது. பாமகவினர் வேதனையின் உச்சத்தில் இருக்கின்றனர். பாமகவின் தலைவர் ராமதாஸ் தான். தமிழகத்தில் 2026-ல் நடைபெறும் தேர்தலுக்கான கூட்டணியை ராமதாஸ் தான் முடிவு செய்வார். அவர் சொல்லும் நபருக்கு தான் பாமகவினர் வாக்களிப்பார்கள். தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள கடிதத்தில் பாமகவின் தலைவருக்கு தான் வந்துள்ளதே தவிர, அன்புமணிக்கு என வரவில்லை. அன்புமணியின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், தற்போது ராமதாஸ் தான் தலைவர். பிஜேபி தரப்பில் கூட்டணியில் கையில் தேடுவதற்கு ராமதாஸுக்கு தான் அதிகாரம் உள்ளது என தெளிவாக தெரிவித்துள்ளனர்” என்றார்.