பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு..!

 
1

தமிழ்நாட்டில் இத்தனை காலம் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக இந்த முறை தனியாகக் கூட்டணியை அமைத்துள்ளது. பாமக, தாமக, டிடிவி, ஓபிஎஸ் எனப் பலரும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளனர்.

பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, தேனி லோக்சபா தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது. ஜிகே வாசனின் தாமக ஈரோடு, தூத்துக்குடி, ஶ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஓ பன்னீர்செல்வத்திற்கு ராமநாதபுரம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை முறையே வேலூர் மற்றும் பெரம்பலூரில் போட்டியிடுகிறது. இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் சிவகங்கையிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசியிலும் போட்டியிடுகிறது.