மேகதாதுவுக்கு இளைஞர்கள் போராட வேண்டும்- அன்புமணி
கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் காவிரி நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிலிகுண்டுலுவில் இருந்து பூம்புகார் வரை நடைப்பயணத்தை தொடங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “நமது நோக்கம் கர்நாடகாவில் மேகதாது அணையை கட்ட கூடாது என்பதுதான்.. இயற்கை, சுற்றுச்சூழலுக்கு இது எதிரானது.. தமிழகத்தின் உயிர் நாடியே காவிரி தான்.. விவசாயிகள் காவிரியை நம்பி தான் இருக்கிறார்கள்.. மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு குடிப்பதற்கே தண்ணீர் வராது. மேகதாது அணை விவகாரத்தில் ராகுல்காந்தி குரல் கொடுக்க வேண்டும். கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரிடம் ராகுல்காந்தி பேசி அணை கட்டும் திட்டத்தை நிறுத்த வேண்டும். மேகதாதுவில் அணை கட்டினால் கழிவுநீர் கூட தமிழ்நாட்டுக்கு வராது. மேட்டூரில் உள்ள நீரும் கிடைக்காது. தமிழ்நாட்டின் குடிநீர் பாதிக்கப்படும் என்பதால் ஜல்லிக்கட்டு போராட்டம்போல் இளைஞர்கள் முன்வர வேண்டும். கேரளாவிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ராகுல் காந்தியிடம் சண்டை போட்டது கிடையாது.. அவரின் எண்ணமும் எங்களின் எண்ணமும் ஒன்றுதான்” என்றார்.

