மதுவிடமிருந்து விடுதலை கோரி கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்- அன்புமணி ராமதாஸ்

 
anbumani

ஆகஸ்ட் 15: மதுவிடமிருந்து விடுதலை கோரி கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்றுங்கள் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்  அறிவுறுத்தியுள்ளார்.

No social justice talk sans caste census: Anbumani Ramadoss

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய விடுதலை நாளையொட்டி, வரும் 15-ஆம் நாள் காலை 11 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராம சபைக் கூட்டங்கள் தான் அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான  ஊடகம். அந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


வெள்ளையர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டாலும் மது அரக்கனிடமிருந்து இன்னும் விடுதலை பெற வில்லை. மதுவிடமிருந்து மக்கள் மீட்கப்படும் நாள் தான் உண்மையான விடுதலை நாள் ஆகும். எனவே, ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினரும்,  பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்,  மாநிலம் முழுவதும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று  வலியுறுத்தி தீர்மானம்  நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.