"தமிழக சட்டமன்றத்தின் சூப்பர் ஸ்டார் சௌமியா"- அன்புமணி
பள்ளிக்கரணையை சதுப்பு நிலமாக அறிவிக்க கோரி பாமக தலைவர் அன்புமணி, சௌமியா அன்புமணி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கவும், சென்னையை பெருவெள்ள ஆபத்திலிருந்து காக்கவும் வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, “தமிழ்நாடு சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டார் எனது மனைவி செளமியா. ஊழல் செய்வதற்காக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்காமல் திமுக, அதிமுக துரோகம் செய்தது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்யாதது அரசு செய்யும் துரோகம். ஊழல் செய்ய இரு திராவிட கட்சிகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கையாக வெளியிடவில்லை. தமிழ்நாட்டில் இயற்கையை பாதுகாக்க ஒரு அரசுக்கு கூட துப்பு இல்லையா..? இதே உங்கள் சொந்த நிலமாக இருந்திருந்தால் விட்டு இருப்பீர்களா..? அரசு நிலம் தானே என்ற அலட்சியம் தான். நூறு ஆண்டுகளுக்கு முன் 15 ஆயிரம் ஏக்கர் இருந்த சதுப்பு நிலம் இன்று 2,500 ஏக்கராக சுருங்கியுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு ஈர நில ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணையை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தொடர்ந்து பொய்யான பரப்புரை செய்து வருகிறார். தமிழக அரசின் அலட்சியம் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை தாரைவார்ப்பதாக அமைந்துவிடும். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அமைதியாக இருப்பது நல்லதல்ல. அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்” என்றார்.

