“காங்கிரசால் தனியாக நின்று ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாது”- அன்புமணி விமர்சனம்

 
“காங்கிரசால் தனியாக நின்று ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாது”- அன்புமணி விமர்சனம்

நாங்கள் ராணுவத்தையே பார்த்தவர்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகாபலிபுரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சிதலைவர் அன்புமணி, “காங்கிரஸ் கட்சியின் தலைவராக வந்திருக்கும் மாணிக்கம் தாகூர், சட்டை எல்லாம் மடித்து விட்டுக்கொண்டு பேசுகிறார். யோவ் நாங்கள் ராணுவத்தையே பார்த்து விட்டோம். துப்பாக்கியை பார்த்து விட்டோம், தடியடியை பார்த்து விட்டோம். காவிரி நதிநீர் விவகாரத்தில் பாஜகவும், காங்கிரஸும் இணைந்து சூழ்ச்சி செய்து, தமிழகத்திற்கு வர வேண்டிய காவிரி நீரை தடுக்க முயற்சிக்கின்றன. மேகதாது விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸும், தமிழக கங்கிரஸூம் இரட்டை வேடம் போடுகிறது. கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் குழந்தையை கிள்ளிவிடுவார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தொட்டிலை ஆட்டிவிடுவார். தமிழகம் வரவுள்ள ராகுல் காந்தி காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பேசுவாரா? காங்கிரசால் தனியாக நின்று ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாது.

அய்யாவின் வழியில் அய்யாவின் லட்சியங்களை நிறைவேற்றுவோம். என் மீது நம்பிக்கை வைத்து என்னை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. அய்யா வாழ்கின்ற காலத்திலேயே பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தை ஆள வேண்டும்” என்றார்.