“ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய இளைஞர்களே இதுக்கும் ரீல்ஸ் போடுங்க”- அன்புமணி

 
ச்

சென்னையின் முக்கிய இடங்களில் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Image

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தி, பாமக சார்பில் கையெழுத்து இயக்கத்தை சென்னை,  தி. நகர் பாண்டி பஜாரில் பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர். பின்னர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வலியுறுத்தி நடந்த கையெழுத்து இயக்கம் குறித்த துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கினார் அன்புமணி

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “இளைஞர்களே.. !! ஒரு ஆட்சி மாற்றத்தையே கொண்டு வந்தீங்க.. இந்த பள்ளிக்கரணையை நேரில் போய் பாருங்க.. குப்பையை எரிக்குறாங்க.. இதையெல்லாம் ரீல்ஸ் போடுங்க.. 15,000 ஏக்கர் இருந்துச்சி.. இப்போ 2500 ஏக்கர் தான் இருக்கு.. ஒட்டுமொத்த வேளச்சேரியே பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துல கட்டுனது தான். சென்னையில் உயிர்வாழ பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மிகவும் முக்கியம். தமிழகத்தில் உள்ள 26,800 ஏக்கர் ஈர நிலத்தை மறுவரையறை செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள Wet Land Committee தூங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் சேகர்பாபுதான் CMDA Incharge. இவரை போன்ற அமைச்சர்கள், அதிகாரிகள் இருந்தால் சென்னை இன்னும் நாசமாகத்தான் போகும். சென்னையின் முக்கிய இடங்களில் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

Image

வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு பேருந்து நிலையம், நேரு ஸ்டேடியம் உள்ளிட்டவை ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டவை. தமிழ்நாட்டில் சதுப்பு நிலம் ஆணையம் என ஒன்று உள்ளது. அது எதற்கு உள்ளது என்றே தெரியவில்லை. கடந்த ஆட்சியாளர்கள் ஏரிகளை, நீர்நிலைகளையும் ஆக்கிரமிப்பதை வேலையாக வைத்திருந்தனர். கடந்த ஆட்சியாளர்களுக்கு ஏரி, குளங்கள் நீர் நிலைகள் குறித்த புரிதல் இல்லை. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நாளொன்ருக்கு 5ஆயிரம் டன் குப்பைகள் கொட்டப்படுகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இல்லையென்றால் சென்னையில் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிடும்” என்றார்.