“திமுக ஆட்சியில் 5 வருடம் சென்னையை நாசப்படுத்திட்டாங்க.. அதுக்கெல்லாம் சேகர்பாபுதான் காரணம்”- அன்புமணி

 
விரைவில் கூட்டணி அறிவிப்பு - அன்புமணி ராமதாஸ் அதிரடி

ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்திலேயே முதலமைச்சர் விஜய் தைரியமாக இந்த அறிவிப்பை வெளியிருக்கின்றார்கள் என்றால் உண்மையிலேயே நாம் அவரை பாராட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

“மாம்பழ சின்னம் நமக்குதான்... இன்னும் 5 மாதத்தில் நீங்களெல்லாம் அமைச்சர்களாவீங்க”- அன்புமணி 

சென்னையில் நடைபெற்ற பாமக நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், “எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, இபிஎஸ், மு.க.ஸ்டாலின் ஆகிய முந்தைய முதல்வர்களை நாங்கள் பலமுறை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினோம். அவர்களிடம் அதிகாரம் இருந்தது. ஆட்சி இருந்தது. ஆனால் மனசு இல்லை. ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்திலேயே முதலமைச்சர் விஜய் தைரியமாக இந்த அறிவிப்பை வெளியிருக்கின்றார்கள் என்றால் உண்மையிலேயே நாம் அவரை பாராட்ட வேண்டும். தி.மு.க ஆட்சியில் 5 வருடம் சென்னையை நாசப்படுத்திட்டாங்க.. அதுக்கெல்லாம் சேகர்பாபு என்ற ஒரே ஒரு ஆள் தான் காரணம்.. அதனால்தான் இன்று அனுபவிக்கிறார்கள்.. அவர் என்ன பெரிய ஆளுமை மிக்கவரா..? மேயர் பதவி எவ்வளவு அதிகாரமிக்க பதவி.. மேயர் பதவி என்பது அதிகாரமிக்க பதவி ஆனால் மேயர் பிரியாவை சேகர்பாபு செயல்படவில்லை. .. காரில் தொங்கிங்கொண்டு என்ன கலாச்சாரம் இதெல்லாம்? அன்றைய முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அதை எடுக்காத காரணத்தினாலதான், இன்னைக்கு சென்னை... குப்பையை வந்து எரிக்கக்கூடாது. உலகத்துல எங்கேயுமே குப்பையை எரிக்கிறது கிடையாது. ஆனால், இங்கே இன்சினி ரேட்டர், குப்பையை எரிக்கிறதுக்கு... அதுல கொஞ்சம் ஒன்னு கரண்ட் தயாரிக்கிறாங்களாம். ஆனால், அந்த குப்பையை எரிச்சா எவ்வளவு பாதிப்பு, டயாக்சின்ல இருந்து என்னென்ன நச்சு வரும்? வாயு வந்து இங்கே வெளியில சுத்தி இருக்கும், குழந்தைகளுக்குப் பாதிப்பு இதெல்லாம் வரும்னு அது அந்த விஷயம் தெரிஞ்சா எதைக் செய்யமாட்டாங்க. ஆனா, பிரச்சனை அது தெரியலை.

இன்னைக்கும் கூட சென்னையில எவ்வளவு செய்யலாம், எவ்வளவு செய்யலாம். ஆனா சென்னை மக்கள் பத்தி நானும் சென்னையிலதான் இருக்கிறேன். ஆனால் நான் இதுக்கு முன்னாடி டி.நகர்ல இருந்தேன், இப்ப நான் அங்கே அந்தப் பக்கம் போயிட்டேன். ஆனால், இங்கே சென்னையில அது அவ்வளவு பொல்யூஷன்ல, தண்ணீர் பிரச்சனை, குடிநீர் பிரச்சனை எவ்வளவு பிரச்சனை, போக்குவரத்தில் நெருக்கடியில் இருந்து எல்லா இருக்கு. ஆனா, செய்யலாம். நிறைய எங்ககிட்ட நிறைய வந்து சொல்யூஷன்ஸ் இருக்கு, தீர்வுகள் எங்ககிட்ட எவ்வளவு இருக்கு. இது சும்மா நாங்க வாய்க்கு வந்ததெல்லாம் பேசமாட்டோம். இந்த விஞ்ஞான முறையிலே ஆலோசனை செய்து ஆய்வுகள் நடத்தித்தான், ஒவ்வொன்னும், ஒவ்வொரு பிரச்சனைக்கும் நாங்க தீர்வு கொடுப்போம், விஞ்ஞானம். சயின்டிஃபிக் சொல்யூஷன்ஸ். அது யார் வேணாலும் கொடுக்கப்போனோம். அதனால, ஒரு தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள்” என்றார்.