தகுதியற்ற அரசு... 5 ஆண்டு காலத்தில் பூஜ்ஜியம்: அன்புமணி

 
அன்புமணி

ஊழலில் தான் திமுக ஆட்சி முதலிடத்தில் உள்ளது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Image

மதுராந்தகம் கூட்டத்தில் உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி, “ஊழலில் தான் திமுக ஆட்சி முதலிடத்தில் உள்ளது. திமுக ஆட்சியில் ரூ.4750 கோடி மணல் கொள்ளை ஊழல். நகராட்சி நிர்வாகத்துறையில் பணிநியமனத்தில் ரூ.888 கோடி ஊழல். டாஸ்மாக், வரி ஏய்ப்பு ரூ.1.82 லட்சம் கோடி ஊழல். திமுக ஆட்சியின் முடிவுக்கு இன்று ஒரு தொடக்கம், ஜீரோ கவர்மென்ட்; ஜீரோ கவர்னன்ஸ். இன்னும் 2 மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆவார் எடப்பாடி பழனிசாமி. 2047இல் இந்தியாவை வல்லரசாக மாற்ற அழைத்துச் செல்பவர் பிரதமர் மோடி” என்றார்.