“சில செய்திகளை வெளியே சொல்ல முடியாது” - அன்புமணி ராமதாஸ்
ராமதாஸால் தற்போது பாமகவை நிர்வகிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. சில செய்திகளை வெளியே சொல்ல முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக பொதுக்குழுவில் உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “ராமதாஸ் உருவத்தில் இங்கு இல்லை என்றாலும் உள்ளத்தில் இங்கு உள்ளார். பாமகவில் ராமதாஸ்கான நாற்காலி நிரந்தரமானது. அவர் நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. சில நேரங்களில் சாமிக்கு கோபம் வந்துவிடும். இங்கு பூசாரிதான் சரியில்லை. 2026 தேர்தலுக்கு தொண்டர்கள் விருப்பப்படி இன்னும் சில நாட்களில் மெகா கூட்டணியை அமைப்போம்.. நாம் ஆட்சிக்கு வருவோம். தொண்டர்களை பொறுப்புடனும் கடமையுடனும் வழிநடத்துவேன். பொறுப்புகளுக்காக இருப்பவன் நான் அல்ல. என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பு வழங்கியதற்கு மிக்க நன்றி! ராமதாஸால் தற்போது பாமகவை நிர்வகிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. சில செய்திகளை வெளியே சொல்ல முடியாது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தான் எங்களுக்கு வழிகாட்டி. என் மீது தொண்டர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது. ராமதாஸை சுற்றியுள்ள சில தீய சக்திகள், குள்ளநரி கூட்டங்கள் மாற்றி, மாற்றி பொய் சொல்லுகின்றனர். தற்போது அய்யாவை சுற்றியுள்ள சில சுயநலவாதிகள், தீய சக்திகள் நான் சொல்லாததையெல்லாம் அவரிடம் சொல்கின்றனர். ராமதாஸ்க்காகவும், சமுதாயத்திற்காகவும் நான் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு உள்ளேன்” என்றார்.


