“வன்னியர்களை நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார்”- அன்புமணி ராமதாஸ்
வன்னியர்களுக்கு நிச்சயமாக இடஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களிடம் முதலில் உறுதி அளித்தார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை தி. நகரில் நடைபெற்ற சமூகநீதி பேரவை சார்பில் ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினோம். அப்போது வன்னியர்களுக்கு நிச்சயமாக இடஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களிடம் முதலில் உறுதி அளித்தார். ஆனால் கடைசியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய போது வன்னியர் இட ஒதுக்கீடு வழங்குவதில் பிரச்சனை இருக்கிறது என்றார். இட ஒதுக்கீடு வழங்கப்படும் என வன்னியர்களை நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என மு.க.ஸ்டாலின் கூறினார். வன்னியர் இட ஒதுக்கீட்டில் மு.க.ஸ்டாலின் நிலைப்பாடு மாறிவிட்டது” என பேசினார்.


