“வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின்”- அன்புமணி ராமதாஸ்

 
இந்த அறிவிப்புகளை உடனே வெளியிட வேண்டும் - முதல்வருக்கு ரெக்வஸ்ட் வைத்த  அன்புமணி...

சேலம் இரும்பாலை சாலையில்  உள்ள தனியார் மண்டபத்தில், சேலம் மாவட்ட  பாட்டாளி சொந்தங்களுடன் சந்திப்புக் கூட்டம் பாமக சார்பில்  நடைபெற்றது. சேலம் மாநகர் மாவட்ட பாமக செயலாளரும், மேற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான இரா.அருள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ், மாநிலத்தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் பங்கேற்றனர். 

மண்ணைக் காக்க மண்டியிடாமல் போரிட்ட மருது சகோதரர்கள்.. வீரவணக்கம் செலுத்துவொம் - அன்புமணி..!!

கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் 8 தொகுதியில் தனித்துப் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியும். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும், அதனை தமிழக அரசு செயல்படுத்த மறுக்கிறது. தமிழக அரசியல் வரலாற்றில் வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். வன்னியர்கள் முன்னேறிவிடக் கூடாது என்பதற்காக உள்ஒதுக்கீடு வழங்க ஸ்டாலின் மறுக்கிறார். வன்னியர்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பார்க்கிறார் முதல்வர்  ஸ்டாலின். தமிழகத்தில் இனி வரும் காலங்களில் கூட்டணி கட்சிகள் தான் ஆட்சியமைக்கும். தனித்து யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது.


மணிமண்டபம் மட்டும் போதாது, வன்னியருக்கு உள் ஒதுக்கீடு வேண்டும். எம்ஜிஆர் ஆட்சியில் வன்னியருக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்க கோப்புகள் தயாராயின. ஆனால் ஜெயலலிதா வன்னியர்களுக்கு நல்லதும் செய்யவில்லை, கெட்டதும் செய்யவில்லை. நீதிமன்றத்தில் முறையாக வாதாடாத காரணத்தால் உள் ஒதுக்கீடு ரத்தானது. உள் ஒதுக்கீட்டுக்காக நானும், ராமதாஸும் பலமுறை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விட்டோம். எங்களிடம் செய்து தருகிறேன் என முதல்வர் ஸ்டாலின் வாக்களித்தார். ஆனால் இப்போது 2 ஆண்டுகள் கழித்து மத்திய அரசுதான் செய்ய வேண்டும் என ஸ்டாலின் கூறுகிறார்” என்றார்.