எந்த சமுதாயத்துக்கு பிரச்சனை என்றாலும் முதலில் வந்து நிற்பவர் ராமதாஸ்- அன்புமணி
எந்த சமுதாயத்துக்கு பிரச்னை என்றாலும் முதலில் வந்து நிற்பவர் ஐயா ராமதாஸ் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை, தி.நகரில், மருத்துவர் ராமதாஸ் எழுதிய "போர்கள் ஓய்வதில்லை" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நூலில், மருத்துவர் ராமதாஸ் அவர்கள் நடத்திய போராட்டங்கள், சமூகத்திற்கான வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவை குறித்த 54 நிகழ்வுகள் விளக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்க்கும் வேளையில் என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத் திட்டத்தை ஆதரிப்பதன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலினின் இரட்டை வேடம் தெரியவந்துள்ளது. ராமதாசை அங்கீகரிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. கொச்சைப்படுத்தாமல் இருந்தால் போதும். எந்த சமுதாயத்துக்கு பிரச்சனை என்றாலும் முதலில் வந்து நிற்பவர் அவர்தான். ராமதாஸ் வந்த பின் வட தமிழகம் அமைதியாக இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் தினமும் கலவரம் தான்” என்றார்.