ராமதாஸை வைத்து நாடகம்! அவர் என்ன எக்சிபிஷனா?- அன்புமணி
Oct 10, 2025, 20:15 IST1760107504585
ராமதாஸுக்கு ஏதாவது ஆகிவிட்டால், உடன் இருப்பவர்களை தொலைத்து விடுவேன் என பாமக தலைவர் அன்புமணி ஆவேசமாக கூறினார்.

உத்தண்டியில் நடைபெற்று வரும் பாமக மா.செ.க்கள் கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், “பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு ஏதாவது ஒன்று நடந்தால் உடன் இருப்பவர்களை தொலைத்துவிடுவேன். மருத்துவ பரிசோதனைக்கு வந்தவரை வைத்துகொண்டு நாடகம் நடத்த எனது தந்தை என்ன கண்காட்சியா? . உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன். மனதில் அவ்வளவு வலியை வைத்துக்கொண்டு தான் வெளியில் சிரித்துக் கொண்டிருக்கிறேன் கட்சியில் அதிக எம்.எல்.ஏ.க்கள் வரவேண்டும் என நான் உழைத்துக் கொண்டு இருக்கிறேன்” என்றார்.

