“தற்குறி என சொன்னது தவறு! Bigg Boss பார்த்த இளைஞர்கள் இன்று சட்டமன்ற நேரலையை பார்க்கிறார்கள்”- அன்புமணி
சட்டமன்றத் தேர்தலில் தவெக அடைந்த வெற்றி ஒன்றும் சுனாமி அல்ல என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பல்லாவரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “மாற்றத்தை மனதார வரவேற்கிறேன். இளைஞர்கள் இன்று அரசியலை தெரிந்துகொண்டு விட்டார்கள். தேர்தலுக்கு முன் அவர்களை தற்குறி என பேசினார்கள். அது தவறானது. இந்த மாற்றத்தை தானே `மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என நாம் முயற்சி செய்தோம். அன்று பிரசாரம் வெற்றிபெற்றது. நாம் வெற்றிபெறவில்லை. கலைஞரும் ஜெயலலிதா அம்மையாரும் இருந்ததால் முடியவில்லை. முதல்வர் விஜய்க்கு வாக்களித்த மக்களின் தீர்ப்பையும், தமிழ்நாட்டில் மாற்றம் வரவேண்டும் என்ற அவரது மனநிலையையும் நாம் மதிக்க வேண்டும்.
அதேநேரம் இது மிகப்பெரிய பேரலையோ,சுனாமியோ கிடையாது. சட்டமன்றத் தேர்தலில் தவெக அடைந்த வெற்றி ஒன்றும் சுனாமி அல்ல. அப்படி இருந்திருந்தால் 170 எம்.எல்.ஏக்கள் வந்திருக்க வேண்டும். 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட தவெக வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. விஜய்க்கு வாக்களித்தவர்களை உதாசீனம் செய்யக் கூடாது.இந்தத் தேர்தலில் இரண்டு கட்சிகள் மட்டும்தான் தலைநிமிர்ந்துள்ளன.. ஒன்று தவெக.. மற்றொன்று பாமக. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நமது இலக்கு நிறைவேறியுள்ளது.Bigg Boss பார்த்த இளைஞர்கள் இன்று சட்டமன்ற நேரலையை பார்க்கிறார்கள்” என்றார்.

