“தமிழ்நாட்டில் கடன் உயர்வு, கஞ்சா பரவல் அதிகரிப்பு”- அன்புமணி
தமிழ்நாட்டில் கடன் உயர்வு, கஞ்சா பரவல் அதிகரித்துள்ளதாக திமுக மீது அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “கடந்த ஐந்து ஆண்டுகளில் 22 லட்சம் கிலோ கஞ்சா விற்பனை நடைபெற்றுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் போதைப்பொருள் தடுப்பு குறித்து குறிப்பிடப்படவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்ல. அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். மாநிலத்தின் கடன் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அம்பத்தூரில் 25% தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு குறைபாடு நிலவுகிறது. அரசு 5.5 லட்சம் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி 94,000 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளது. மணல் குவாரிகளில் வருவாய் குறைவாக காட்டப்பட்டுள்ளது, பொருளாதார முறைகேடுகள் ஏற்பட்டுள்ளது” என்றார்.

