"இது எங்களுடைய உட்கட்சி விவகாரம். எங்களுக்குள் பேசிக்கொள்வோம்"- அன்புமணி ராமதாஸ்

 
ச்

இது எங்களுடைய உட்கட்சி விவகாரம், எங்களுக்குள் பேசிக்கொள்வோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  கூறியுள்ளார்.

‘சித்திரை முழு நிலவு மாநாடு’ நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “வருகின்ற மே மாதம் 11ம் தேதி மாமல்லபுரத்தில் ‘சித்திரை முழு நிலவு மாநாடு’நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர். பாமகவில் நடப்பது எங்களுடைய உட்கட்சி விவகாரம், எங்களுக்குள் நாங்கள் பேசிக்கொள்வோம். ஐயா ராமதாஸ் வழிகாட்டுதலுடன், அவருடைய கொள்கையை நிலைநாட்ட, பாமகவை ஒருக்கட்டத்தில் ஆளும்கட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாக அனைவரும் உழைப்போம்” என்றார்.

பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை செயல்தலைவராக மாற்றி அக்கட்சியின் நிறுவனர் தலைவரும் தந்தையுமான ராமதாஸ் அறிவித்திருந்தார். பாமகவின் தலைவராக தான் பொறுப்பேற்று கொள்வதாக கூறியிருந்தார். தந்தை- மகனுக்கான மோதல் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தியதால் மீண்டும் அன்புமணி ராமதாசை பாமகவின் தலைவராக நியமிக்க கோரி குடும்ப உறுப்பினர்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் சமாதான பேச்சுவார்த்தை செய்தனர். இருப்பினும் தன் முடிவிலிருந்து பின்வாங்க போவதில்லை என ராமதாஸ் உறுதியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.