“படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை”- பாமகவின் நிழல் பட்ஜெட்

தமிழ்நாட்டின் கடன் 15 லட்சம் கோடி உள்ளது. கடனிற்கு மட்டும் ஆண்டிற்கு ஒரு லட்சம் கோடி வட்டி மட்டும் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள், அசலை இதுவரை அடைக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக பொது நிழல் நிதி அறிக்கையை 23-வது ஆண்டாக திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் ராமதாஸ் கெளரவதலைவர் ஜி.கே.மணி வெளியிட்டனர். 23-ஆம் ஆண்டாக நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடபட்டதை மூத்த பத்திரிக்கையாளர்கள் பெற்று கொண்டார்.
பொது நிதி நிழல் அறிக்கை வெளியிட்ட பின் செய்தியாளரை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “தமிழகத்தின் வளர்ச்சிக்காக திமுகவும் அதிமுகவும் எதிர்கட்சியாக இருந்தபோது நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிட்டது கிடையாது. தொடர்ந்து பாமக தான் வெளியிட்டு வருகிறது. தமிழகத்தில் கனிம வளத்தினை முறைபடுத்த வேண்டும். தமிழ்நாட்டின் கடன் 15 லட்சம் கோடி உள்ளது கடனிற்கு மட்டும் ஆண்டிற்கு ஒரு லட்சம் கோடி வட்டி மட்டும் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள், அசலை இதுவரை அடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் அரசு துறையில் 1.20 கோடி பேர் காத்திருக்கும் நிலை உள்ளதால் பாமக நிதி நிலை அறிக்கையில் அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும். அரசு நிர்வாகத்தில் செயற்கை நுண்ண்றிவு திறன் தொழில்நுட்பம் அரசு நிர்வாகத்தில் பயன்படுத்தபடும். உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு செய்யவேண்டும், ஜனவரி 25 உலகத் தமிழ்மொழி நாளாக கடைபிடிக்கப்படும். தமிழத்தில் மாநில பாட திட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பயிற்று மொழியாக்க சட்டமாக்க வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டில் இடஒதுகீட்டின் பயன்கள் குறித்து வெள்ளையறிக்க வெளியிடப்படும். தமிழ்நாட்டில் அனைத்து மது பீர் ஆலைகள் மூடப்படும், தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை 2 லட்சம் கோடி வரியில்லாத வருவாய் ஈட்டத் திட்டம், தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் , மேகதாது அணை தடுக்கபடும், மின் திட்டங்களை விரைவுபடுத்த 2 லட்சம் மடிக்கணினி திட்டம் பத்திரிக்கையாளர்களுக்கு செயல்படுத்தபடும். படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ,5,000 உதவித்தொகை வழங்கப்படும். ரூ.318-க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும்.” என்றார்.