“சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க அதிகாரம் இருந்தும், அதை தட்டிக் கழிக்கும் முதல்வரின் செயல் கோழைத்தனம் தான்”- அன்புமணி ராமதாஸ்

 
அன்புமணி ராமதாஸ் 

ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாத திமுக அரசு தான் கோழைத்தனம் அமைச்சர் சேகர்பாபு பேச்சுக்கு அன்புமணி ராமதாஸ் பதிலளித்துள்ளார்.

Image

திமுக அரசு, ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாமல் கோழைத்தனத்தை பின்பற்றுகிறது என நேற்று கும்பகோணத்தில் நடந்த வன்னியர் சங்க சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். இந்த பேச்சுக்கு தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மத்திய அரசிடம் பாமக  வழக்குகிற்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம் என்றார். 

இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு திமுக அரசு தான் கோழைத்தனமாக செயல்படுகிறது .பீகார், தெலுங்கானா, ஜார்கண்ட், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு இந்திய சட்டம் 2008 ன் படி  நடத்தி உள்ளனர். தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருந்தும் அதிகாரம் இல்லை என்று கூறுவது தான் கோழைத்தனம். பாமக வழக்கிற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. மற்ற மாநிலங்களுக்கு உள்ள அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லையா? தமிழ்நாடு என்ன ஜப்பான், மற்றும் சீனாவில் உள்ளதா? இந்தியாவில் தானே உள்ளது. அதிகாரம் இல்லை என்றால் கூட  செயலை முடிப்பவர்கள் தான் உண்மையான வீரன். அதிகாரம் வைத்து கொண்டு ஜாதிவாரி கணக்கு எடுப்பு நடத்த முடியாது என்று பொய் சொல்வது தான் கோழை தனம்” என்றார்.

அன்புமணி ராமதாஸ்

இதனையடுத்து திமுக அரசு தொடர்ந்து தேர்தலில் வெற்றி அடையும் நிலையில், திமுக அரசை எதிர்க்கக்கூடிய அரசியல் இயக்கங்களையும் இணைத்து தேர்தலை சந்திக்க பாமக முயற்சி  எடுக்குமா? எனும் கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் எனக்  கூறினார்.