தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரத்தை வேரோடு அழிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

 
அன்புமணி ராமதாஸ் 

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்குச் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அவரை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

Image

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “அடித்தட்டு மக்களும் வளர வேண்டும் என போராடிய ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பு சமூகநீதி இயக்கத்திற்கான இழப்பு. தமிழகத்தில் கூலிப்படை கலாசாரத்தை வேரோடு அழிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களுக்கு பிறகு தமிழக போலீசார் மீது நம்பிக்கை இல்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முழுமையான விசாரணை நடைபெறும் என்பது சந்தேகம். ஆம்ஸ்ட்ராங்  மறைவு அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை. ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு சமூக நீதிக்கு பின்னடைவு. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் திருமாவளவன் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என கூற மறுப்பது ஏன்? இதற்கு ஒரு நியாயம், அதற்கு ஒரு நியாயமா?

Image


தமிழ்நாட்டில் 2 மிகப்பெரிய சமுதாயம் இருக்கிறது.ஒன்று பட்டியல் இன சமுதாயம், மற்றொன்று வன்னியர் சமுதாயம். இந்த இரு சமுதாயங்களும் எண்ணிக்கையில் பார்த்தால் 40%தான். ஆனால் ஆட்சி, அதிகாரம், கல்வி, வேலைவாய்ப்பில் இவர்கள் மிகவும் தாழ்ந்து கிறார்கள். இவர்களெல்லாம் முன்னுக்கு வரவேண்டும். உண்மையான சமூக நீதி பெற வேண்டுமென ஆம்ஸ்ட்ராங் கூறியிருக்கிறார். பட்டியலின மக்கள், மற்றவர்கள் ஒன்றிணைய வேண்டுமென குரல் கொடுத்தவர் ஆம்ஸ்ட்ராங்” என்றார்.