விக்கிரவாண்டியில் தேர்தலே தேவையில்லை; திமுக வெற்றி என அறிவித்துவிடலாம்- அன்புமணி

 
anbumani ramadoss anbumani ramadoss

விக்கிரவாண்டியில் தேர்தலே தேவையில்லை, திமுக வெற்றி என அறிவித்துவிடலாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Anbumani Ramadoss

விக்கிரவாண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிசிஐடி மீது மரியாதை உள்ளது. ஆனால் நம்பிக்கை இல்லை. கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த 10 நாளில் விழுப்புரத்தில் ஒருவர் கள்ளச்சாராயம் குடித்து பலியாகியுள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் அரசியல்வாதிகள், காவல்துறையினர் சம்பந்தப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்.

விக்கிரவாண்டியில் தேர்தலே நடத்தத் தேவையில்லை. இது ஒரு தேர்தலா? இதற்கு தேர்தலே தேவையில்லை. திமுக வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு போகலாம். குழந்தைகளை கடத்திவைத்து ஓட்டி போட்டால்தான் விடுவோம் என திமுகவினர் மிரட்டக்கூட செய்வார்கள். ஜெயலலிதா புகைப்படத்தை நாங்கள் பயன்படுத்த கூடாதென்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை” என்றார்.