அன்புமணி பதவியிலிருந்து நீக்க ராமதாசுக்கு அதிகாரம் உண்டா..?

பொதுக்குழுவை கூட்டாமல் கட்சி தலைவரை மாற்ற முடியுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில் பாமக விதிகளின் அடிப்படையில் பொதுக்குழுவிற்கே தலைவரை நீக்க அதிகாரம் உள்ளது.
பாமக-வின் சட்ட விதிகளின்படி, தலைவரை சேர்க்கவும், நீக்கவும் பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டுதான், அன்புமணி பாமக தலைவரானார். சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அன்புமணி தலைவராக நியமித்த தீர்மானம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் பொதுக்குழுவை கூட்டாமல், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியுள்ளார். ஆகவே பாமக விதிகளின் படி, தேர்தல் ஆணையம் ராமதாஸின் இந்த அறிவிப்பை ஏற்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை நீக்கி விட்டு செயல்தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்படுவார், பாமகவின் தலைவராக இன்று முதல் தான் இருப்பேன் என அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பு கட்சியின் வளர்ச்சிக்காகவும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி அறிவிப்பதாகவும், மாற்றத்துற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதை இப்போது ஊடகங்கள் முன்பாக அறிவிக்க முடியாது, சிறுக சிறுக தெரிவிப்பேன் எனக் கூறினார்.