”என் 5 மாச குழந்தையை கூட ராமதாஸ் ஐயா பாக்கல..”- தேம்பி அழுது வாக்கு சேகரிக்கும் அன்புமணி மகள்கள்

 
அ

பென்னாகரம் தொகுதி ஏரியூர் பகுதியில் பாமகவுக்கு ஆதரவு திரட்டிய அன்புமணி மகள்கள், தாத்தாவை தங்களிடம் பிரித்து விட்டுதாக கண்ணீர் மல்க உருக்கமாக பேசி, வாக்கு சேகரித்தனர்.

தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஸ்டார் வேட்பாளராக போட்டியிடும் சௌமியா அன்புமணிக்கு, சங்கமித்ரா, சஞ்சுத்ரா இருவரும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வி.செல்வத்தை ஆதரித்து ஏரியூர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். அப்போது தங்களையும் தாத்தா ராமதாஸையும் ஜி.கே.மணி பிரித்துவிட்டதாகவும், பொங்கல் விழா எப்போதும் கூட்டுக் குடும்பமாக கொண்டாடி மகிழ்ந்தோம். ஆனால் தற்போது ஒரு வருடமாக பிரிந்து கிடக்கிறோம். தனக்கு குழந்தை பிறந்து 6 மாதமாகியும், இதுவரை தாத்தாவுக்கு தெரியாது. எப்போதும் பிரசவ வலி பிடித்தால், மருத்துவமனைக்கு வந்து பார்ப்பார். என் குழந்தையை பார்க்கவில்லை. போன் கூட பண்ணவில்லை. அதற்கு கூட ஜி.கே.மணி விடுவதில்லை‌. நாங்கள் தருமபுரியில் எங்கள் அம்மாவுக்காக பிரச்சாரம் செய்ய தான் வந்தோம்‌. ஆனால் பென்னாகரத்தில், நமக்கு துரோகம் செய்தவர்கள் போட்டியிடுகிறார்கள். 


தருமபுரி வெற்றியை விட, பென்னாகரம் வெற்றி தான் நமக்கு ரொம்ப முக்கியம் என, இரண்டு பிள்ளைகளும் கண்ணீர் விட்டு உருக்கமாக பேசி வாக்கு செகரித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.