திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அன்புமணி
அண்ணா திமுக ஆட்சிக்கு வந்ததும் நெசவாளர்களுக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி வாக்குறுதி அளித்தார்.

திமுக பாஜக கூட்டணி சார்பில் கும்பகோணம் திருவிடைமருதூர் பாபநாசம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகே இன்று மாலை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய மருத்துவர் அன்புமணி, “அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நெசவாளர்களுக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும், தற்போது விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு நான் தான் காரணம். காவிரி டெல்டா பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதற்கு மூல காரணமாக நான் விளங்கினேன். திமுக கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகளை கூறாமல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் வழங்கப்படும் என கூறி வாக்கு கேட்பது வெட்கக்கேடு
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் பத்தாயிரம் ரூபாய் பணம் வரவு வைக்கப்படும், வீட்டுக்கு ஒரு குளிர்சாதன பெட்டி பிரிட்ஜ் வழங்கப்படும், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கும்பகோணத்தில் தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும், அதற்கு அன்புமணி ராமதாஸ் ஆகிய நான் உத்திரவாதம். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக கிடங்குகளை கட்ட வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தேவையாக இடங்களில் கிடங்குகள் அமைக்கப்படும்.திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, அதிமுக ஆட்சிக்கு வந்தால் எந்த ஒரு சம்பவமும் நடக்காது” என்றார் .



